குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள் அரவிந்த் சாமி கடும் தாக்கு


சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை எனில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்துங்கள் என்று நடிகர் அரவிந்த் சாமி குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் பத்மாவதி. படத்தின் போஸ்டர் வெளியானதிலிருந்து அதன் மீதான சர்ச்சைகளும் ஆரம்பித்தன.ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்தரிக்கப் படுவதாக கூறி பலரும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கூறினர்.

உச்ச நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறிவிட்டதால் பத்மாவதி ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.  அது குறித்து நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில்,

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை எனில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்துங்கள். முடிந்தால் நாட்டு மக்களின் உயிர்க்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுங்கள். இல்லையென்றால் அதற்கும் சாக்கு போக்கு சொல்லாதீர்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.