பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்


நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் சினிமாவில் மட்டுமல்லாது சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுப்பவர். ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் பிரச்னை, மீனவர் பிரச்னை என பல பிரச்சனைகளில் குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் தற்போது பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் அவர், 'விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.