ஸ்கெட்ச் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்


விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கெட்ச்'.  பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி இந்த படம் வெளியானது.

இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியாதாக தகவல்கள் வருகின்றன. நேற்று இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிற்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

அப்போது ரஜினி, படத்தில் கடைசி 30நிமிடங்கள் அற்புதமாக இருந்ததாகவும், படத்தின் கிளைமஸ் எதிர்பார்க்காத வகையில் இருந்தது எனவும் பாராட்டியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.