வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ


அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மிகவும் குண்டாக இருந்தார். இது அவரது ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவரிடம் உடம்பை குறைக்கும் படி கூறிவந்தனர். அது மட்டுமின்றி சிம்பு மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

அதனால் தனது உடலை குறைக்கும் வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.