அனைவரும் எதிர்பார்த்த பார்ட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை 28 இரண்டாம் பாகத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் பார்ட்டி. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் ஜெய், சிவா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, ரெஜினா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க கோவாவில் எடுத்திருப்பதால் இளம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.