குடியரசு தினத்திற்கு ரஜினி கமல் வாழ்த்து


இன்று இந்தியாவின் 69ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில், 'ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள்' என பாபா முத்திரையுடன் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹசனும்  ட்விட்டரில், 'வாழ்க நம் குடியரசு' என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் புதிய அரசியல் கட்சி தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.