கயல் திரைப்பட நடிகர் மீது மோசடி புகார்


கயல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரன். இவர் சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனாவின் கணவர் ஆவார். இவர் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

'அக்ராஸ்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பிரபு. அவர் சந்திரன் மீது 5கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக பிரபு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

'கயல்' சந்திரன் தயாரித்துவரும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்திற்காக தன்னிடம் 5கோடி வாங்கியதாகவும், தன் நிறுவனத்தின் பெயரின் படத்தை ரிலீஸ் செய்ய மறுப்பதாகவும் பணத்தையும் திருப்பி தரவில்லை எனவும் புகார் அளித்துள்ளார்.