பஸ் கட்டண உயர்வு: அரசை விமர்சித்த கமல்


நடிகர் கமலஹாசன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். வழக்கமாக தமிழக பிரச்சனைகளுக்கு ட்விட்டரில் குரல் கொடுக்கும் கமல்ஹாசன் பஸ் கட்டண உயர்வுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம்  செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!

என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.