முருகதாஸ் வெளியிட்ட ஜெய் நடிக்கும் 'ஜருகண்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


பலூன் படத்தை தொடர்ந்து ஜெய் நடிக்கும் படம் 'ஜருகண்டி'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

பத்ரி கஸ்தூரி மற்றும் நிதின் சத்யா தயாரிக்கும் இந்த படத்தை பிச்சுமணி இயக்குகிறார். இவர் வெங்கட்பிரபுவின் அசிஸ்டன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகியாக மலையாள நடிகை ரேபா மோனிகா நடிக்கிறார். பாபு சசி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் நிதின் சத்யா இந்த படத்தில் முதல் முறையாக ஜெய் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.