குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வரச்சொல்லவில்லை: ரஜினி


ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக ரசிகர் சந்திப்பின் இறுதி நாளன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று உறுப்பினரசேர்க்கையில் ரஜினிகாந்த் பேசிய காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் 'அரசியல் என்பது பொதுநலம் அரசியல் என்பது சுயநலமல்ல, குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வரச்சொல்லவில்லை எனவும்  தொண்டர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.