ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்: ரஜினிகாந்த்


ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக ரசிகர் சந்திப்பின் இறுதி நாளன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

நேற்று எம்.ஜி.ஆரின் 101ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவிருந்து நின்று போன கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை நடிகர் ரஜினிகாந்த் கமலஹாசன் தொடங்கிவைத்தனர்.

அந்த விழாவிற்கு வந்த ரஜினியிடம் ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் சந்திப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி தேர்தலை சந்திப்பேன் என்று கூறினார்.