'உதயம் NH4' இயக்குனருடன்,வெற்றிமாறன், சமுத்திரக்கனி இணையும் புதியப்படம்


இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு சங்கத்தலைவன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த படத்தை படத்தை மணிமாறன் இயக்குகிறார். இவர் சித்தார்த் நடித்த 'உதயம் NH4', ஜெய் நடித்த 'புகழ்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவுளி துறையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை இயக்கவிருக்கிறார் மணிமாறன். தறி என்ற நாவலை மையப்படுத்தி இந்த கதையை உருக்கியிருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், விஜய் டி.வி ரம்யா ஆகியோர் நடிக்கின்றனர்.