ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறதா காலா ?


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் தனது அடுத்த படத்திலும் ரஜினியை இயக்குகிறார். இந்த படத்திற்கு காலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.