தனுஷ் நடிக்கும் மாரி 2 ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்


பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் மாரி. கமர்சியல் படமாக வெளிவந்த இப்படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் பாலாஜி மோகன். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசைமைக்கிறார். இந்த படத்தில் கிருஷ்ணா, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.