விஜய் சேதுபதி படம் உட்பட இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள 5 முக்கிய திரைப்படங்கள்


விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' உட்பட இந்த வாரம் (பிப்ரவரி 2) அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 திரைப்படங்கள் வெளியாகின்றன. 

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. வித்தியாசமான கெட்டப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வாரம் வெளியாகும் படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் இதுவாகும்.

அடுத்ததாக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஏமாளி. இந்த படத்தின் டீஸர் வெளியாகி இளைஞர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது, சமுத்திரக்கனி, அதுல்யா நடித்திருக்கும் இப்படத்திற்கு இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்ததாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விசிறி. தல தளபதி ரசிகர்களை பற்றிய படம் என்பதால் விஜய் அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இவைகளை தவிர விஜயகாந்த் மகன் நடிக்கும் மதுரைவீரன், விஜய் யேசுதாஸ் நடிக்கும் படைவீரன் படங்களும் நாளை(பிப்ரவரி 2) ரிலீஸ் ஆகின்றன.