திரைப்பயணத்தில் 6 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி


விஜய் டி.வி.யில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா படம் மூலம் வெள்ளித்திரைக்குள்  நுழைந்தார். சின்னத்திரை போலவே திரைப்படங்களிலும் காமெடியில் கலக்கினார்.

3 படத்தில் தனுஷின் நண்பராக நடித்தாலும் அவரின் காமெடி அனைவரையும் ஈர்த்தது. அடுத்ததாக மனம் கொத்தி பறவை ஓரளவிற்கும் தனுஷ் தயாரிப்பில் அவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியும்  பெற்றது. 

தற்போதுவரை 12 படங்கள் பட்டுமே நடித்திருந்தாலும் அவரின் மார்க்கெட் விஜய் அஜித்திற்கு அடுத்தபடியாக இருக்கிறது. இன்றுடன் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் சக கலைஞர்கள் என அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.