சிம்பு ஓவியா இணையும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீடு


களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பிறகு அவரின் மார்க்கெட் எகிறியது.

கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று சிம்புவும் ஓவியாவும் இணைந்து 'மரண மட்டை' என்ற பாடல் பாடியிருந்தனர். அதன் பிறகு இருவருக்கும் திருமணம் என்ற வதந்தி பரவியது.

இந்நிலையில் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார். ஓவியா நடிக்கும் சிம்பு இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு '90ml' என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.