மீண்டும் கெளதம் மேனனுடன் இணைகிறார் விக்டர் ?


கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.

விக்டர் கேரக்டரில் அருண் விஜய்யின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதன் பிறகு அருண்விஜய்யின் மார்க்கெட்டும் உயர்ந்தது. அவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தை தொடர்ந்து அருண் விஜய் கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.