விக்ரம் பிரபு நடிக்கும் 'அசுர குரு' தொடங்கியது: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


பக்கா படத்தை தொடர்ந்து தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு புதிய படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்திற்கு அசுர குரு என்று பெயர்சூட்டியுள்ளனர். படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். 

எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். முதல் முறையாக விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் ஹன்சிகா. இந்த படத்தில் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பூஜையும் நேற்று நடைபெற்றது.