விஜய் பாடலுக்கு நடிகை அதுல்யா ரவியின் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ


'காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. தற்போது அவர் நடிப்பில் வெளியான ஏமாளி திரைப்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஏமாளி படத்தை தொடர்ந்து அதுல்யா ரவி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த படத்திற்கு தேவதாஸ் பார்வதி என்று பெயர் சூட்டியுள்ளனர். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதுல்யா விஜய் ரசிகை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அதுல்யா விஜய்யின் மெர்சல் படத்தில் வரும் நீதானே நீதானே பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.