சிம்பு மணிரத்னம் படத்தில் இணைந்த அருண் விஜய்: படத்தின் போஸ்டர் வெளியீடு

 

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில்  சிலம்பரசன், பகத் பாசில், விஜய் சேதுபதி , ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.  இந்த படத்திற்கான இசையமைக்கும் பணிகளை ரஹ்மான் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பணிகள் கோவாவில் தொடங்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யும் இணைந்துள்ளார். அருண் விஜய் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் போஸ்டரையும் நேற்று (பிப்ரவரி 9) வெளியிட்டுள்ளனர்.