வைரலாகிறது 'செக்க சிவந்த வானம்' ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்


இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில்  சிலம்பரசன், பகத் பாசில், விஜய் சேதுபதி , ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். அருண் விஜய் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.  இந்த படத்திற்கான இசையமைக்கும் பணிகளை ரஹ்மான் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். சிம்பு, அரவிந்த் சாமி இருக்கும் இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.