தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா ?


நடிகர் தனுஷ் முதன்முதலில் இயக்குனர் அவதாரம் எடுத்த படம் 'பவர் பாண்டி'.  அந்த படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தினார். தற்போது எனை நோக்கிப்பாயும் தோட்டா, மாரி 2, வட சென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அந்த படங்களை முடித்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான பணிகளை இந்த ஆண்டு ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறார்.

தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நாயகனாக நடிப்பதற்கு நாகார்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.