'தளபதி 62' படத்தில் நடிக்கிறாரா சயீஷா ?


வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சயீஷா. அவர் தற்போது கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்', விஜய் சேதுபதியின் 'ஜூங்கா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்த பதிலளித்த நடிகை சயீஷா தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மெர்சல் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.