ஜோக்கர் பட இயக்குனருடன் இணையும் ஜீவா: படத்தின் டைட்டில் அறிவிப்பு


கலகலப்பு 2 படத்தை தொடர்ந்து ஜீவா தற்போது டான் சாண்டி  கொரில்லா படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து அவர் ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஒலிம்பியா மூவீஸ் இந்த படத்தை தயாரிக்கின்றது. இப்படத்திற்கு ஜிப்ஸி என்று பெயர் சூட்டியுள்ளனர். மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜீவா தற்போது கொரில்லா படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அப்படத்தை தொடர்ந்து இந்த படம் துவங்கவுள்ளது. அதற்கான வேளைகளில் இயக்குனர் ராஜு முருகன் ஈடுபட்டுள்ளார்.