ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா: இயக்குனர் யார் தெரியுமா ?


ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டார். ஜோதிகா தனது அடுத்த படத்தில் ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஜோதிகா, ஸ்வர்ணமால்யா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் ராதாமோகன் இயக்கிய திரைப்படம் மொழி. மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்திற்கு பிறகு மீண்டும் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஜோதிகா.