காலா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மரண மாஸ் போஸ்டரும் வெளியானது


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் தனது அடுத்த படத்திலும் ரஜினியை இயக்குகிறார். இந்த படத்திற்கு காலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் காலா படத்தை முதலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்போடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.  ரஜினி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.