அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த காலா


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் தனது அடுத்த படத்திலும் ரஜினியை இயக்குகிறார். இந்த படத்திற்கு காலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் காலா படத்தை முதலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது . இது பற்றிய அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ட்விட்டரில் இந்திய அளவில் காலா முதலிடம் பிடித்தது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதற்கு ட்ரெண்டிங்கில் முதல்  இடம்பிடித்த முதல் படம் காலா என்பது குறிப்பிடத்தக்கது.