காலா படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் தனது அடுத்த படத்திலும் ரஜினியை இயக்குகிறார். இந்த படத்திற்கு காலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.  இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் காலா படத்தை முதலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதியை நடிகரின் காலா படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வரும் மார்ச் 1ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் டீஸர் வெளியாகிறது.