முதலில் வருவது 2.0 படமா காலா படமா ? ரஜினிகாந்த தகவல்


கபாலி வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் காலா.  இந்த படத்தில் ஹுமா குரோஷி, நானா படேக்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படமும் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எந்த படம் முதலில் வெளியாகும் என்று ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும்' என்று கூறினார்.