அட்டகத்தி தினேஷ் நடிக்கும் 'களவாணி மாப்பிள்ளை' தொடங்கியது: புகைப்படங்கள் உள்ளே


அட்டகத்தி தினேஷின் அடுத்த படம் களவாணி மாப்பிள்ளை. இந்த படத்தின் பூஜை கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இந்த படத்தை காந்தி மணிவாசம் இயக்குகிறார்.  இவர் ராக்காயி கோயில், கட்டபொம்மன் ஆகிய படங்களை  இயக்கிய மணிவாசகத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  

இப்படத்தை காந்தி மணிவாசகத்தின் புஷ்பா பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கவிருக்கிறது.

அட்டகத்தி தினேஷ் ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார். அனந்த ராஜ், தேவயானி, ரேணுகா, முனீஷ்காந்த் மொட்டை 'ராஜேந்திரன் ' உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.