'களவாணி 2' படத்தின் டைட்டிலுக்கு கடும் போட்டி


விமல் ஓவியா நடித்து வெளிவந்து வெற்றியடைந்த படம் களவாணி. இயக்குனர் சர்குணம் இந்த படத்தை இயக்கியிருந்தார். முழுநீள காமெடி படமான இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த படத்தில் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் இயக்குனர் சர்குணம்.

விமல் மற்றும் ஓவியா நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சர்குணம் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. 

தற்போது இந்த படத்திற்கு ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. களவாணி 2ஆம் பாகத்தை இயக்குனர் சர்குனமே தயாரிக்கிறார். ஆனால் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் நசிர் 'களவாணி' டைட்டிலை விட்டுத்தர மறுக்கிறார். அந்த டைட்டிலை பெற இரு தரப்பினரிடையே காக்கும் போட்டி நிலவுகிறது.