நடிகர்கள் ரஜினிகாந்த் கமலஹாசன் திடீர் சந்திப்பு


நடிகர் கமலஹாசன் அடிக்கடி அரசியல் பற்றி ட்விட்டரில் விமர்சனம் செய்துவந்த நிலையில் அரசியலில் இறங்க போவதாக வெளிப்படையாக அறிவித்தார். அவரது பிறந்த நாளன்று ரசிகர்களை சந்தித்தார் கமலஹாசன்.

சில நாட்களுக்கு முன்பு வரும் பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அன்று முதல் தமிழம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இது வெறும் நட்பு ரீதியான சந்திப்பு தான் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். அரசியல் பயணத்தை தொடங்கும் முன் பிடித்தவர்களிடம் கூறிவருதாகவும், அதேபோல் ரஜினிகாந்திடம் கூறியதாகவும் தெரிவித்தார். 

கமல்ஹாசனை வாசல் வரை வந்து வழியனுப்பிய ரஜினிகாந்த், பத்திரிக்கையாளர்களிடம் 'கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். அரசியலில் என்னுடைய  பாணி வேறு, அவருடைய பாணி வேறு. ஆனால் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே. நாங்கள் பணம் புகழ் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்வது ஒன்றே குறிக்கோள்' என்று தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் இருவரின் சந்திப்பும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.