கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கும் மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


பீட்ஸா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களும் வெற்றியை பெற்றுத்தந்தன.

இறைவி படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் மெர்குரி. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறார். 'பெண் ஸ்டுடியோஸ்' மற்றும் 'ஸ்டோன் பெஞ்ச்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்தின் ரிலீஸ் தேதியை கார்த்திக் சுப்புராஜ் நேற்று அறிவித்தார். சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது.