D16, நரகாசூரன் பட இயக்குனரின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்ட்டர் வெளியீடு


துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் முத்திரை பதித்தவர் கார்த்திக் நரேன். திரில்லர் படமாக உருவான இப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. அப்படத்தை தொடர்ந்து நரகாசூரன் என்ற படத்தின் இயக்கினார்.

அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன்,  ஸ்ரேயா  ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார் கார்த்திக் நரேன். இப்படத்திற்கு  நாடக மேடை என்று பெயர் சூட்டியுள்ளார். தனது வழக்கமான த்ரில்லர் கதையிலிருந்து வேறுபட்டு, யதார்த்தமான, மிருதுவான படமாக இதை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.