கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த குழந்தைக்கு திருமணம்: புகைப்பட ஆல்பம்


கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தனா. அந்த படத்தில் மாதவனுக்கு மகளாக நடித்த கீர்த்தனாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

அவருக்கு தற்போது திருமணமாகவுள்ளது. நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா தம்பதியின் மகளான கீர்த்தனா 8 வருடங்களாக காதலித்தவரை மணக்கிறார். அவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் பார்த்திபனும் சீதாவும் விவாகரத்து பெரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் மகளின் நிச்சயதார்த்த விழாவில் நடிகை சீதா கலந்துகொண்டார்.