கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


காலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 2.0  படமும் ரிலீசுக்கு தயாரகவுள்ளது.  இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார்.

அரசியலில் இறங்குவதற்கு முன்பு அரசியல் கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதற்காக அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டு வந்தார். தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பக்கா அரசியல் படமாக உருவாகவுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.