நடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள மும்பை செல்கிறார் ரஜினிகாந்த்


இன்று அதிகாலை மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மும்பை செல்கிறார்.

தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் பிரபாலாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 16வயதினிலே, மூன்றாம் பிறை உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்து புகழின் உச்சிக்கு சென்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்து அங்கும் பிரபலமான நடிகையானார்.

நேற்று துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரின் உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்படுகிறது. 

அவரின் இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டு சென்றார்.