முதலில் தமிழகத்தில் தான் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்: ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து


ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக ரசிகர் சந்திப்பின் இறுதி நாளன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த சிஸ்டம் சரியில்லை அதை முதலில் மற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்யவேண்டு என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.