சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பொன்ராம்  மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (பிப்ரவரி 17) வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு 'சீமராஜா' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

அதோடு இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்த்துள்ளனர்.