சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ரகுல் ப்ரீத் சிங்


தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். அவர் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ஒரு புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி.வி கைப்பற்றியுள்ளது.

சிவ கார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை 24AM புரொடக்க்ஷன் தயாரிக்கிறது. ரவிக்குமார் இயக்குகிறார். இவர் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தீரன் படத்தை தொடர்ந்து சூர்யா படத்தில் நடித்துவரும் ரகுல் அடுத்ததாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார்.