படப்பிடிப்பு முடிவதற்குள் சிவகார்த்திகேயன் படத்தின் உரிமையை வாங்கிய சன் டி.வி


தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். அவர் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ஒரு புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி.வி கைப்பற்றியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை சன் நிறுவனம் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிவ கார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை 24AM புரொடக்க்ஷன் தயாரிக்கிறது. ரவிக்குமார் இயக்குகிறார். இவர் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் கூட வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் நிறைவடையாத நிலையில் இப்படம் விற்கப்பட்டுள்ளது. சிவ கார்த்திகேயனின் இந்த வளர்ச்சியை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.