வீரமாதேவி படத்திற்காக தமிழ் கற்றுக்கொள்ளும் சன்னி லியோன்


ஆபாச படங்களில் நடித்துக்கொண்டிருந்த சன்னி லியோன் பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் சரித்திர படமாக உருவாகவுள்ளது. இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்த படத்திற்கு 'வீரமாதேவி' என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சன்னி லியோன் தமிழ் கற்று வருவதாக தெரிவித்தார்.