'சூர்யா 36' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு


நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். அந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கித்தில் நடிக்கிறார் சூர்யா. 

இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர்.   இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 5ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.