தனது கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்தார் டி.ஆர்: பெயர் பலகையில் ஜெ. படம்


இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக கூறிய டி.ஆர். தனது கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். அந்த பலகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படமும் இடம்பெற்றிருந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் தி.மு.க வில் இருந்த டி.ராஜேந்தர் பிறகு அதிலிருந்து விலகி லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் அவ்வப்போது போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார்.

சமீப காலமாக அரசியாலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டி.ஆர் இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாக கூறினார். இந்நிலையில் இன்று அவர் கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். அதில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.