நாச்சியார் உட்பட இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள முக்கியமான படங்கள்


ஜோதிகா நடிக்கும் நாச்சியார் உட்பட இந்த வாரம் முக்கியமான 3 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்  நடிப்பில் பாலா இயக்கியிருக்கும் படம் நாச்சியார். படத்தின் டீஸர் வெளியா, அதில் ஜோதிகா பேசிய வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இந்த படம் இந்த வாரம் (பிப்ரவரி 16) வெளியாகிறது.

கிருஷ்ணா நடிப்பில் ராஜாராமன் இயக்கும் வீரா படமும் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.

ஆரி நடித்திருக்கும் நாகேஷ் திரையரங்கம் படமும் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது. திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவைகளை தவிர மனுஷனா நீ என்கின்ற படமும் வெளியாகிறது.