இணையத்தில் தீயாய் பரவும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் புகைப்படம்


தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு மேல் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது அஜித்தின் விசவாசம் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

முதலில் சிம்பு, பிரபு தேவா ஆகியோரை காதலித்த நயன்தாரா பிறகு பிரிந்துவிட்டார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக தெரிகிறது. அவ்வப்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக  அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வெளிவரும்.

தற்போதும் அதுபோன்றதொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அவர்கள் இருவரின் சட்டையில் 'VN' என்ற எழுத்துக்களும் உள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.