அடுத்த படத்திற்காக சிலம்பாட்டம் கற்றுக்கொள்ளும் விஜய் ஆண்டனி


காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு திமிரு புடிச்சவன் என்று பெயர்சூட்டியுள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

கணேஷா இயக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் மூலம் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய் ஆண்டனி இந்த படத்தில் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக விஜய் ஆண்டனி சிலம்பாட்டம் கற்றுக்கொண்டு வருகிறார்.