ரஜினி படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி?


காலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 2.0  படமும் ரிலீசுக்கு தயாரகவுள்ளது.  இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார்.

அரசியலில் இறங்குவதற்கு முன்பு அரசியல் கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதற்காக அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டு வந்தார். தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.