யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் பாடிய விஜய் சேதுபதி


நடிகர் விஜய் சேதுபதி யுவன் சங்கர் ராஜா இசையில் பேய் பசி என்ற படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் பேய்ப்பசி. ஹாரர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  அம்ரிதா, கருணாகரன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

டோனி ஜான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.